2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அனோப்பிளிஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மலேரியா காய்ச்சலைப் பரப்பும் அனோப்பிளிஸ் ஸ்ரெபசிஸ் என்ற நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று  (30) வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த வருடம் 5,783 பேர் பாதிக்கப்பட்டதாக, யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இது ஆபத்தான நிலை. மக்கள் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.

“மேலும், மலேரியா காய்ச்சலைப் பரப்பும் அனோப்பிளிஸ் ஸ்ரெபசிஸ் என்ற நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நுளம்பினால் மலேரியா காய்ச்சல் இன்னமும் யாருக்கும் பரப்பப்படவில்லை. ஆனால் வெளிநாட்டிலிருந்து ஒருவர் மலேரியா நோயின் தாக்கத்துடன் யாழ். மாவட்டத்துக்கு வந்தால் அவர் ஊடாக மலேரியா காய்ச்சலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

“எனவே மக்கள் விழிப்படைய வேண்டிய தருணம் வந்துள்ளது. பொது இடங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் தங்களுடைய வீடுகளில் நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் ஊடாக அல்லது கட்டுப்படுத்துவதன் ஊடாக நுளம்புப் பெருக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.

“இதேபோல் சுகாதார அமைச்சும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சைப் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X