2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்’

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணாமல் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால், அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்துமெனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஓர் அரசியல் தீர்வில்லாமல், தாங்கள் மத்திய அரசாங்கத்துடன் அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளல் என்பது, இயலாமையின் வெளிப்பாடாகவே அமையுமே தவிர, இயலாதவன் செய்கின்ற காரியமாக முடியுமெனவும் கூறினார்.

சஜித்தின் தோல்வி:

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் காரணமாக இருக்கலாமெனத் தெரிவித்த சிறிதரன்,  அதேபோல சஜித்தின் செயற்பாடுகளும் அவர் சார்ந்த கட்சியினதும் செயற்பாடுகளும் காரணமாக அமைவதாகவும் கூறினார்.

சஜித்துக்கு ஆதரவாக தாங்கள் செய்த பிரசாரம், தென்பகுதியிலே வேறு விதமாக கொண்டு செல்லப்பட்டதெனவும், அவர் கூறினார்.

அச்சத்தைப் போக்க வேண்டும்:

மனிதர்களை மதிக்காத, மனித உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற, மனித மாண்புகளை நினைக்காக ஒருவரான கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்திருக்கின்றார் என்ற அச்ச உணர்வு தமிழ் மக்கள் ஏற்பட்டிருக்கின்றதெனத் தெரிவித்த சிறிதரன், ஆகையால், தமிழ் மக்களின் இந்த அச்ச உணர்வை அவர் மாற்றியமைக்க வேண்டியது அவசியமெனவும் கூறினார்.

பயமுறுத்தல்கள் அல்லது அடிமைப்படுத்தல்களுக்கு ஊடாக ஓர் இனத்தை அடக்கி வைத்திருக்கலாம் என்று யாரும் நினைத்தால், அந்த நிலைமைகள் எங்கேயும் நிலைத்ததாக வரலாறுகள் இல்லையெனவும் அதனை அவர் உணர்ந்துகொண்டு, தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும், அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .