2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆசனப்பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து நேற்று (09) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

”உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை. சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. 

“தேர்தலுக்கான விண்ணப்பங்கள் தமிழரசுக் கட்சியின் பெயரிலும், சின்னத்திலும் (வீடு) கையளிக்கப்படும். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் வீடு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு நல்குமாறு வடக்கு - கிழக்கில் உள்ள வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .