2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். வலிவடக்கில் மீள்குடியேற்ற அமைச்சால்  வழங்கப்பட்ட காணி மற்றும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடமைப்பு திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (05)  ; இடம்பெற்றிருந்த்து.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அவற்றில்; முதற்கட்டமாக வலி வடக்கு கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 650 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.

மேலும், ஏற்கனவே பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டிருந்த அராலி - பருத்தித்துறை வீதி எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்துவிடப்படவுள்ளது என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X