2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினருக்கு கடூழியச் சிறை

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச்சென்ற ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் நிசா விக்டருக்கு, ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, மல்லாகம் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், இன்று (21) தீர்ப்பளித்தார். 

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான நிசா விக்டர், அந்த வழக்கில் முற்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த நிசா விக்டர், நீதிமன்ற மதிலில் பாய்ந்து தலைமறைவாகினார். 

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், வீடொன்றுக்குள் மறைந்திருந்தவேளை அவரை மடக்கிப் பிடித்தனர். 

இந்நிலையில், குறித்த நபரை இன்று (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .