2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இடையூறுக்கு மத்தியில் தனியாகச் சுடரேற்றிய தவிசாளர்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பொலிஸாரின் அனுமதி மறுக்கப்பட்டும் புலனாய்வாளர்களின் இடையூறுகளின் மத்தியிலும், இன்று (18) முற்பகல் 10.30 மணிக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் சுகாதார முன்னெச்சரிக்கையுடன் பிரதேச சபையில், நினைவேந்தலை அனுஷ்டிக்க ஏற்பாடாகியிருந்த நிலையில், பிரதேச சபைக்கு வருகைதந்த பொலிஸார், நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை எனத் தெரிவித்து தடை விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இங்கே சுகாதார ஒழுங்குகள் அனைத்தும் பேணப்பட்டுள்ளன எனத் தெரிவித்து, தவிசாளரும் உறுப்பினர்களும் பொலிஸ் தரப்புடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தவிசாளர் தன்னுடைய வாகனத்தில் இருந்து அஞ்சலி செலுத்துவதற்கான பொருள்களை எடுத்துவந்து, எவருமின்றி தான் தனியே அஞ்சலி செலுத்த முற்பட்ட போதும், அதற்கும் பொலிஸ் தரப்பினால் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

இருப்பினும், இடையூறுகளை மீறி தவிசாளரினால் ஈகைச்சுடறேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் வளாத்தின் நின்றிருந்த இடத்தில் நின்றவாறு அஞ்சலித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .