2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’இனவாத, மதவாதப் பிரச்சினைகளுக்கு தூபமிட வேண்டாம்’

ரொமேஷ் மதுஷங்க   / 2018 ஜூலை 18 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனையை யாருக்கு வழங்க வேண்டுமெனக் குறிப்பிடும் எவருக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லையென்றும் இவ்வாறான கருத்துகளால், இனவாத, மதவாதப் பிரச்சினைகள் எழக்கூடுமென, வடக்கு மாகாண பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான கருத்துகளால், கஷ்டப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட சமாதானம் உடைந்துவிடுமென்றும், அவர்கள் குறிப்பிட்டனர்.

வவுனியா ஸ்ரீ போதி தக்ஷினாராம விகாரையில், இன்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வவுனியா, முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள விகாரைகளின் விகாராதிபதிகள் கலந்துகொண்டே, மேற்கண்ட விடயம் தொடர்பில், கூட்டாகத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துரைத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான சங்கநாயக்கத் தேரரும் ஸ்ரீ போதி தக்ஷினாராம விகாரையின் விகாராதிபதியுமான சயம்பலாகஸ்வெவே விமலசார தேரர், மரண தண்டனை தொடர்பில் பலர் பலவாறு கருத்துத் தெரிவித்தாலும், அது தொடர்பான தீர்மானத்தை, நாட்டின் ஆட்சியாளர்களும் நீதித் துறையினருமே எடுக்க முடியுமென்று கூறியதோடு, தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் பகிரங்கமாகக் கருத்து வெளியிடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமென, அனைத்துத் தரப்பினரிடத்திலும் கேட்டுக்கொண்டார்.

அண்மையில், மேற்படி மரண தண்டனை குறித்து, ஊடகச் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட பௌத்த தேரர் ஒருவர், மரண தண்டனை அமுல்படுத்தப்படுமாயின், முதலாவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அந்தத் தண்டனையை வழங்கவேண்டுமெனக் கூறியதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட விமலசார தேரர், வடக்கின் தேரர்கள் என்ற ரீதியில், இக்கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

இவ்வாறான கருத்துகளால், இனவாத, மதவாதப் பிரச்சினைகள் எழக்கூடுமெனக் குறிப்பிட்ட அவர், தூக்கிட்டுக் கொலை செய்யவேண்டுமெனக் கூறுவதற்கு, பௌத்த துறவிகளான எவராலும் கூறமுடியாதென்றும் இவ்வாறான கருத்தைக் கண்டிப்பதாகவும் கூறினார்.

இவ்வாறான கருத்துகளால், கஷ்டப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட சமாதானம் உடைந்துவிடும் என்பதோடு, இனவாதம் மற்றும் மதவாதப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதெனக் குறிப்பிட்ட விமலசார தேரர், வடக்கில் வாழும் பௌத்த தேரர்கள், மேற்படி அமைச்சர் குறித்து நன்றாக அறிவரென்றும் அவர், அவரது இன மக்களுக்கு மாத்திரம் வரையறுத்து சேவைகளை வழங்குவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேயைற்றும் அமைச்சராகவும் இம்மாகாணத்தில் உள்ளவர்கள் என்ற ரீதியில், அவர் குறித்துத் தாம் நன்றாக அறிவதாகவும், விகாராதிபதி கூறினார்.

அதனால், தனிப்பட்ட கோபங்களை, இவ்வாறான பகிரங்கக் கருத்துகளால் வெளிப்படுத்துவது, அனைத்துப் பௌத்த துறவிகளும் கண்டிப்பதாக, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .