2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வுக்குள் புகுந்த புலனாய்வு பிரிவினரால் பதற்றம்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (24) இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் புகுந்ததால், குழப்பம் உருவானது.

தியாகி திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களால் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்படும் இரத்ததான நிகழ்வு, அக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, இரத்ததான முகாம் நடைபெறும் மண்டபத்துக்கு வருகை தந்திருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர், அங்கு எதற்காக இரத்ததான முகாம் நடைபெறுகின்றதென, விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனால், இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்பம் உருவானது.

அதையடுத்து, அவர்களில் ஒருவர், தனது இடுப்புப் பகுதியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, தன்னுடன் வந்தவரிடம் கையளித்து விட்டு, தானும் இரத்த தானம் வழங்க முன்வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .