2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இரு தோணிகளில் கால் வைப்பவர்களை தெரிவுசெய்ய வேண்டாம்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா 

“எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்கள் சரியானவர்களைத் தெரிவுசெய்ய வேண்டும். இரு தோணிகளில் கால் வைப்பவர்களைத் தெரிவு செய்ய வேண்டாம்” என, வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூன்றாம் நாள் விவாதத்தத்துக்கான அமர்வு, இன்று (14) காலை 10 மணியளவில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது, வட மாகாண முதலமைச்சர் சரியான நேரத்தில் அவைக்கு வருகை தந்துவிட்டார். ஆனால், ஏனைய உறுப்பினர்கள் தாமதமாகவே அவைக்கு வருகை தந்தனர்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவைத் தலைவர் கூறியதாவது, 

“தேர்தல்களின் போது, மக்கள் தவறிழைக்கின்றார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இரு தோணிகளில் கால் வைப்பவர்களைத் தெரிவுசெய்ய வேண்டாம். 

“ஜனநாயகத்தின் தூண்களாக உள்ள ஊடகவியலாளர்கள், இது தெடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். முன்னைய காலங்களில், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பலர் இருந்தார்கள். தற்போது மக்கள், பெயர்களைப் பார்த்து வாக்களிக்கின்றார்கள். மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களைத் தெரிவு செய்யவேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .