2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உயிரிழந்தவருக்கு கொரோனா: ஆராய்கிறது யாழ். வைத்தியசாலை

Niroshini   / 2021 மே 06 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டப் பின்னர் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில், செவ்வாய்க்கிழமையன்று (04), யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உடனடியாக என்டிஜன் பரிசோதனை செய்த போது, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அவருடைய மாதிரிகள் பெறப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த வயோதிபர், அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டு, பின்னர், அங்கிருந்து 9ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று (05) காலை உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, அவரது சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், நேற்று மாலை வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சடலத்தை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா, இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X