2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊடகவியலாளருக்கு இடையூறு : இருவருக்கு நிபந்தனை பிணை

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, புகைப்பட கருவியை சேதமாக்கி ஊடகவியலாளரை அச்சுறுத்திய இருவரை நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல யாழ்.நீதிவான் அனுமதித்துள்ளார்.

யாழ்.கொக்குவில் சந்திக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை (09) இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது இடையூறு விளைவித்து, அவரின் புகைப்பட கருவியை சேதமாக்கியதுடன், தாக்குதலுக்கு இலக்கான விற்பனை நிலைய உரிமையாளர் மற்றும் அங்கு நின்றிருந்த இளைஞர்கள் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (11) விற்பனை நிலைய உரிமையாளர் மற்றும் அவரது சகோதரரை கைது செய்தனர்.

கைது செய்த இருவரையும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, இருவரையும் நிபந்தனை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார். அத்துடன் வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .