2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘எங்களது நம்பிக்கையை நல்லாட்சி அரசாங்கம் இழந்து வருகிறது’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம், எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே, நாங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறதென, மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில், சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில், இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக வைக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பலாம் என தர்மபால செனவிரட்ன அவைத் தலைவரிடம் கேட்டிருந்தார்.

நாங்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் ஜனாதிபதி என்ன செய்கின்றார் என்று பார்ப்போம் என அவைத் தலைவர் பதிலளித்தார்.

மேலும் பல மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தும் அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை. ஆகவே, அதற்குத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனாலும், தேர்தலை மெல்ல மெல்ல நடத்தாமல் அரசாங்கம் மறந்து போய்விடுமொ என்ற அச்சம் உள்ளதாகவும் அவைத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அஸ்மீன்,

“எமது மக்களுக்குரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஐனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து அவரக்கு வாக்குக் கேட்டோம். ஆனால் அத்தீர்வை ஏற்படுத்துவதற்கு தற்போது தடையாக இருப்பவரே இந்த ஜனாதிபதி தான்.

“அவர் தன்னால் தனது கட்சி பாதிக்கப்படகன் கூடாது என்பதால், தன்னுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே செயற்பட்டு வருகின்றார். இன்றைக்கு இருக்கின்ற ஜனாதிபதிக்கு தைரியம் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவொரு வெட்கமான விடயம் தான்.

“இந்த நாட்டில் மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டி இனவாதப் போக்குடனேயே அவர் நடக்கின்றார். அகவே, நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்” என்றார்.

இதனையடுத்து கருத்து வெளியட்ட முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா,

“இந்த அரசாங்கம் சூழ்ச்சிகளையே செய்து வருகிறது. மாகாண சபையின் காலம் முடிவடைந்த பின்னர் தங்களுடைய கட்சியை வளர்க்கின்ற செயற்பாடுகளையே இங்கு முன்னெடுக்க உள்ளது. இங்குள்ள ஆளுநர் தற்போது இங்கிலாந்து சென்று எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எங்களது மக்களைச் சந்தித்து கேட்கவுள்ளாராம். ஆகவே, அனைத்தையும் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம்” என்றார்.

இதற்குப் பதிலளித்த அவைத் தலைவர், அவ்வாறு சென்றுள்ள விடயங்களை நானும் அறிந்திருக்கின்றேன். ஆனால் நாங்கள் வழித்திருக்கின்றோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .