2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எம்.ஜி.ஆரின் பிறந்ததினம் பாசையூரில் கொண்டாடப்பட்டது

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் 102 ஆவது பிறந்ததினம் யாழ்.பாசையூர் பகுதியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.பாசையூர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், இன்று  (17)  மாலை பாசையூரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலையின் முன்பு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் மற்றும் யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன், கேக் வெட்டியும் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்வில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற தலைவர், உட்பட பொது மக்கள், எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .