2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரு வாக்கு வித்தியாசத்தில் கரவெட்டி பிரதேச சபையும் தமிழரசுக் கட்சியிடம

Shanmugan Murugavel   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையும் இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது.

31 உறுப்பினர்களைக் கொண்ட இப்பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை இடம்பெற்ற நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சி, தமது கட்சியின் தங்கவேலாயுதம் ஐங்கரனையும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது கட்சியின் சதாசிவம் இராமநாதனையும் தவிசாளர் பதவிக்காக பிரேரித்தன.

இந்நிலையில், இரகசிய வாக்கெடுப்பிலா அல்லது பகிரங்க வாக்கெடுப்பிலா தவிசாளரைத் தேர்தெடுப்பதா என்பதை முடிவு செய்வதற்கான வாக்களிப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் பகிரங்கமாக வாக்களிப்பதெனத் தெரிவித்ததோடு, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் இரகசியமாக வாக்களிப்பதென தெரிவித்தனர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும் இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறியிருந்தனர்.

ஆக, 11-10 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் தவிசாளருக்கான பகிரங்க வாக்கெடுப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில், பகிரங்க வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானித்தது பகிரங்கமாகவே நடைபெற்றது, இரகசியமானதாக நடைபெறவில்லை என்று பகிரங்க வாக்கெடுப்புக்கு சதாசிவம் இராமநாதன் ஆட்சேபனை தெரிவித்தார்.

எனினும், விதிமுறைகளின்படி ஒவ்வோர் உறுப்பினரினதும் பெயரைக் கூறி பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என்றே கோர வேண்டுமென வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். பற்றிக் டிரஞ்சன் கூறியிருந்தார். ஆயினும் இதிலும் திருப்தி கொள்ளாத சதாசிவம் இராமநாதன், இது குறித்து மேன்முறையீடு செய்யப் போவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மேன்முறையீடு செய்யலாம் எனக் கூறிய பற்றிக் டிரஞ்சன் தவிசாளருக்கான பகிரங்க வாக்கெடுப்பை நடாத்த, 11-10 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேலாயுதம ஐங்கரன் வென்று தவிசாளரானார். தங்கவேலாயுதம் ஐங்கரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களித்திருந்ததோடு, சதாசிவம் இராமநாதனுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். . அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும் இவ்வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளவில்லை.

இதன்பின்னர், தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தவிசாளராக கந்தர் பொன்னையா தெரிவானார். (படங்கள்: எம். றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X