2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கட்டடத்தை பூசி மெழுகும் செயற்பாடு நிறுத்தம்

எஸ்.என். நிபோஜன்   / 2018 ஜூலை 18 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 12 ஆம் திகதியன்று திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கக் கட்டடத்தின் தரம் தொடர்பில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த கட்டடத்தின் வெடிப்புப் பகுதிகளை, ஒப்பந்தக்காரர்கள் பூசி மெழுகும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளின் தரம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், மாகாண சமூகச் சேவைகள் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிபிள்ளை மற்றும் வை.தவநாதன் ஆகியோரின் தலா இருபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டிலும் மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் இரண்டு இலட்சம் ரூபாயுமாக, 42 இலட்சம் ரூபாய்ச் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டத்தின் பல பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயேஇ இது தொடர்பில் ஆராயப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .