2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலாவுக்கு எதிராக சுவரொட்டிகள்

Editorial   / 2018 ஜூலை 09 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இன்று (09) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

“நாடாளுமன்ற உறுப்பின் பதவி எதற்கு?” என்று குறிப்பிடப்பட்டே, இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அச்சுவரொட்டியில், “புங்குதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றிய குற்றவாளி”, “அமைச்சர் பதவியை ஐம்பது கோடிக்கு விற்றவர்; இவருக்கு எதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் யாழப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், தமிழீழ விடுதைப் புலிகளின் கை வட - கிழக்கில் ஓங்க வேண்டுமென்றும், புலிகளை மீள உருவாக்க வேண்டுமென்றும் விஜயகலா தெரிவித்த கருத்தால், பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததோடு தெற்கில் எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தன.

இந்நிலையில், தன்னுடைய இராஜாங்க அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்

இதையடுத்து, அவருக்கு ஆதரவாக, “தமிழ்த் தலைவி” எனக் குறிப்பிடப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, நேற்றைய தினம் அவருக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .