2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கல்வியமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை’

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

“வடமாகாண கல்வியமைச்சராக, மாகாணசபை உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை” என,  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு இன்றூ அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கல்வியமைச்சராக உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

யாரை நியமிப்பது என்பது தொடர்பில் என்னால் முடிவெடுக்கப்படவில்லை. நியமனங்களைச் செய்ய வேண்டியவர் முதலமைச்சரே. போரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக உரிய செயல்முறைகளுக்கும், செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் என்னால் செய்யப்படும்.

தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை நானே மேற்பார்வை செய்து வருகின்றேன்” என, சி.வி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X