2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

காட்சிப்படுத்தப்பட்ட மாடு வெட்டப்படவில்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், வெட்டப்படுவதற்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாடு, இறைச்சிக்காக இன்று (16) வெட்டப்படவிருந்த போதிலும், அது வெட்டப்பட்டிருக்கவில்லை.

யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் உள்ள காணி ஒன்றில், குறித்த மாடு, கடந்த செவ்வாய்க்கிழமை (11) முதல் காட்சிப்படுத்தப்பட்டு, நேற்றைய தினம் வெட்டப்படுவதாக இருந்தது.

அதன் ஒரு பங்கு இறைச்சி 1,000 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், குறித்த மாட்டைக் காட்சிப்படுத்திய வேளை, நுழைவுக் கட்டணமாக 100 ரூபாய் அறவிப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த நுழைவுச் சீட்டை வழங்குவதற்கு, மாநகர சபையிடம் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லையெனவும், அதற்கான வரிகள் தமக்குச் செலுத்தப்படவில்லையெனவும், மாநகர சபையினரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாட்டைக் காட்சிப்படுத்திய நபரை பொலிஸார் வரழைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, குறித்த மாட்டை, நேற்று அதிகாலை 5 மணிக்கு வெட்டுவதற்கெனத் தயாராகியிருந்த நிலையில், மாடு காட்சிப்படுத்தப்பட்ட இடத்துக்கு நேற்றுக் காலை விஜயம் மேற்கொண்ட சுகாதாரப் பிரிவினர், குறித்த மாட்டை வெட்ட அனுமதிக்கவில்லை.

பின்னர், மாட்டை மீண்டுமொரு தடவை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், காலை 9 மணிக்குப் பின்னர் வெட்ட அனுமதித்தனர்.

9 மணிக்குப் பின்னர் மாடுகளை வெட்ட முடியாது என்பதால், குறித்த மாடு, இறைச்சிக்காக நேற்று வெட்டப்பட்டவில்லை.

அதேவேளை மாடு இன்றைய தினம் காலை இறைச்சிக்காக வெட்டும் நோக்குடன், யாழ்.பண்ணை பகுதியில் உள்ள கொல்களமொன்றில் கட்டப்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X