2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கால அவகாசத்தை இடைநிறுத்தக்கோரி, கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படும்’

சொர்ணகுமார் சொரூபன்   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 05:21 - 1     - {{hitsCtrl.values.hits}}

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2 வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆரம்ப நடவடிக்கையைக் கூட இதுவரை மேற்கொள்ளாது உள்ளது. எனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக இடைநிறுத்தி, இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தி, மக்கள் மத்தியில் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளவுள்ளதாக” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. பேரவையில், இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதுக்கு 2 வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போது வழங்கப்பட்டது. அக்கால அவகாசம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதனைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் இரண்டு வருட கால அவசாகம் வழங்கப்பட்டது. இன்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் செயற்பட்டது போலவே பொறுப்புக்கூறலில் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகயும் இன்றியே இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் செயற்பாடின்மையால் மக்கள் அதனை நிராகரித்திருக்கின்ற நிலையில், ஒரு விதமான முன்னேற்றமும் இல்லை என்ற யதார்த்தநிலைதான் காணப்படுகின்றது.

நாம் ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என வலிறுயுத்தி வந்திருந்தோம். இலங்கை ஜனாதிபதியும் சரி பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் 30.1 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றப்போவதில்லை என தெளிவாகக் கூறிய நிலையிலேயே அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களும், காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒருவருடமாக தெருக்களிலேயே இருக்கின்றனர்.

எனவேதான் நாங்கள் மேலதிக கால அவகாசத்தை இடைநிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த வேண்டும். அல்லாவிடின் குறைந்த பட்சம் இலங்கைக்கென சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.

இதன்பொருட்டு, மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான கையெழுத்துப் போராட்டத்தை விரைவில்; ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டமானது தமிழ் மக்கள் பேரவை, பேரவையில் இணைத்தலைவராகவுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கையெழுத்துகள் பெறப்படும். அம் மக்களுக்கு யதார்த்த நிலைபற்றி தெளிவுபடுத்தப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 1

  • jeyarajah Friday, 16 February 2018 02:59 PM

    Kajenthirakumar wants to do something new. But this rice cannot be cooked in the united nations.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X