2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிராம சேவையாளர்களிடம் பண மோசடி

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவையாளர்களை அலைபேசியில்  தொடர்பு கொண்ட மோசடி செய்த நபர்கள் 14 ஆயிரம் ரூபாய் முதல்  25 ஆயிரம் ரூபாய் வரையில் பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்றைய தினம்  அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர்கள் தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தை "ஈசி காஸ்" மூலம் அனுப்பி வையுங்கள் என  கோரியுள்ளனர். 

அதனை அடுத்து ஒரு கிராம சேவையாளர் 14ஆயிரம் ரூபாயும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை "ஈசி காஸ்" மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்து கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டனர்.  

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .