2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குடியேற்றங்களுக்கு முன்னேற்பாடாக விகாரைகள் அமைக்கப்படுகின்றன

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“குடியேற்றங்களுக்கு முன்னேற்பாடாக பௌத்தர்களே இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன” என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்,

“குடியேற்றங்களுக்கு முன்னேற்பாடாக பௌத்தர்களே இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. போர்க் காலத்துக்கு முன் முல்லைத்தீவில் ஒரு விகாரையும் காணப்படவில்லை. இப்போது 11 விகாரைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டி காட்டுகின்றன.

கொக்கிளாயில் இராணுவத்தினரின் துணையோடு தமிழ் மக்களின் காணிகளிலே, அம்மன் கோவில் இருந்த இடத்திலே, தற்போது பௌத்த விகாரை கட்டப்படுகின்றன. நாயாற்றுப்பகுதியிலும் பிள்ளையார் சிலைக்கு அருகில் விகாரை அமைக்கப்படுகின்றது. அதற்கு முன்பாக இராணுவ முகாம் இருக்கின்றது. இவை எல்லாம் பாரிய குடியேற்றத்துக்கான ஆரம்ப வேலைகளாக கருத முடிகிறது” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .