2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று (09) மதியம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான். இதன்போது பயன்பாடற்ற காணி ஒன்றுக்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்துள்ளான். அந்த கைக்குண்டை வீதியில் எறிந்து விளையாடிய போது குண்டு வெடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X