2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குமரப்பா, புலேந்திரனுக்கு தூபி அமைக்கலாம்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நினைவு தூபி அமைப்பதுக்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றினால் இன்று (08) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவு தூபியை மீள அமைப்பதுடன் ஏனைய சகல உறுப்பினர்களுக்கும் பிறிதொரு தூபியை அருகில் அமைப்பது என வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதற்கமைய தூபி அமைப்பதுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (05) காலை நடைபெறவிருந்த நிலையில், அன்றைய தினம் அங்கு கூடிய சிலர் நினைவு தூபி அமைக்கப்படக் கூடாது என ஆப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அந்நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸார் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, நகர சபையானது இலங்கையின் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டதென்றும் நகர சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட ரீதியான தீர்மானம், அதற்கமைய குறித்த தூபியைக் கட்டுவதுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் குறித்த செயற்பாடானது இலங்கையின் எந்தவித சட்டவிரோதமான பணத்திலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நகர சபைத் தலைவர் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேற்கொள்ள சட்ட ரீதியாகவே ஈடுபட்டுள்ளார் என்றும் இத் தீர்மானததுக்கு எதிராக நீதவான் நிதிமன்றினால் கட்டளையோ அல்லது தடைக் கட்டளையோ வழங்க முடியாத காரணத்தினாலும் குறித்த செயற்பாடு சட்டரீதியற்றது அல்ல என்ற அடிப்படையில் இதனை எதிர்த்து தடை விதிக்க கோரி பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு நிராகரிக்கப்படுவதாக நீதிவான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .