2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘குருந்தூர் மலை விடயம் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு’

Gavitha   / 2021 ஜனவரி 20 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

தமிழ் மக்கள் மீது, ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கான ஆரம்பக்கட்டமாகவே, குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக, வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி.சிவமோகன் தெரிவித்தார்.

குருந்தூர் மலைக்கு, நேற்று (19) நேரடியாக விஜயம் மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்குக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இனரீதியாக, தமிழர்ளுக்கு எதிராக உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைவாக, பொய்யொன்றைக் கூறி, தொல்லியல் திணைக்களம் ஆராய்ச்சி என்ற போர்வையில் இங்கு வந்துள்ளது என்றும் திட்டமிட்டு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தால், தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே இதைத் தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செயற்பாட்டின் மூலம், முல்லை மண்ணில், பாரிய ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் இதில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது கேள்விக்குறியே என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மலையின் கரைப்பக்கம் மாத்திரமே தங்களால் பார்க்க முடிந்தது என்றும் இந்த மலையின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், வெளிப்படைத் தன்மையாக, தொல்பொருள் ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு, இதுவொரு ஆதாரம் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .