2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைபிரட் தென்னை இனம் யாழில் நடப்படவுள்ளது

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதற்றடவையாக, 3 வருடங்களில் காய்க்கும் உயர் ரக தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன என்று, யாழ்ப்பாணப் பிராந்திய தென்னைப் பயிர்செய்கைச் சபையின் முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாகத் தொடர்ந்துரைத்த அவர், இந்தத் தென்னங்கன்றுகள், கைபிரட் தென்னை இனத்தைச் சேர்நதவையெனவும் ஒரு பயனாளிக்கு 2 தென்னம் கன்றுகள் வீதம் 20,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளனவெனவும் கூறினார்.

எனவே, உரிய பராமரிப்பு, நிலவசதிகள் உள்ளவர்கள், பிரதேசத்தில் உள்ள கற்பகதருச் சங்கங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனக் கேட்டுக்கொண்ட அவர், இதற்கான பதிவுகள் நிறைவடைந்தவுடன் இரண்டு வாரங்களில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுமெனவும் கூறினார்.

இந்தத் தென்னங்கன்றுகளை 26  அடி  இடைவெளியில் நடவேண்டுமெனவும், வைகுந்தன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .