2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொள்ளையர்கள் கைது

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 05 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென்மராட்சி பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியில் இருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர்.

கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடையாளம் கண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முகாமையாளர் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை நேற்று (04) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொள்வனவு செய்தார் எனும் குற்றச்சாட்டில் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கோப்பாய், மானிப்பாய் மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X