2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில், வீடொன்றுக்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்​டி, பாதிக்கப்பட்டவர்களால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகலில் புகுந்த இளைஞர் குழுவொன்று, அங்கிருந்த வயோதிபர்கள் இருவரைத் தாக்கியதுடன், அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு​செய்யப்பட்ட போதும், இது குறித்து பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பாதிக்கப்பட்டவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இச்சம்பவம் குறித்தும் பொலிஸரின் செயற்பாடு குறித்தும், யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில், நேற்று (30) பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .