2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சபையின் தேசிய கொடி கிழிந்த நிலையில் பறக்கிறது

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையில் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடி மற்றும் மாகாண சபைக்கொடி ஆகியன நிறம் மங்கிய நிலையிலும் கிழிந்த நிலையிலும் காணப்படுகின்றன.

தேசிய கொடி கிழிந்த நிலையில் அல்லது நிறம் மங்கிய நிலையில் காணப்பட்டால், தேசிய கொடி அவமதிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

இரவு வேளைகளில் தேசிய கொடி இறக்கப்பட்டு, காலை நேரங்களில் ஏற்றப்பட வேண்டும். இரவு வேளைகளில், தேசிய கொடி ஏற்றப்படின், அதற்கு வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.

இந்நிலையில், வடமாகாண சபையில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி நிறம் மங்கிய நிலையிலும் கிழிந்த நிலையிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .