2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே விசாரணை’

எம். றொசாந்த்   / 2018 மே 25 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே வங்கி ஊழியர் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது” என குறித்த வங்கி வட்டாரத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

வங்கியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வங்கிச் சீருடையில் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் குறித்த வங்கியில் உள்ளது. இதனடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது சம்பளத்துடன் கூடிய இடைநிறுத்தம். வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டும் என்பது நடைமுறை என வங்கி தரப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வங்கிக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன்.

மேலும், குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சிலர் தமது கணக்கை மூடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .