2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’சமூக பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

சமூக பிறழ்வுகளை கட்டுப்படுத்த, இளைஞர்கள் கூட்டாக முன்வரவேண்டும் என வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 61ஆவது ஆண்டு விழாவில், நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார்.

சிவஞானம் மேலும் தெரிவிக்கையில்,

“சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது மகிழ்சியை தருகின்றது. எனினும் எமது பிரதேசத்தின் ஒரு பகுதி இளைஞர்கள் வழிதவறிப் போவது மிகவும் கவலை தரும் விடயமாக இருக்கின்றது. குறிப்பாக மதுப் பாவனை, போதைப் பொருள் பாவனைகள் எமது சமூகத்துக்குள் உள்வாங்கப்பட்ட காரணத்தால் சில இளைஞர்கள் வழிதவறி போகின்றார்கள். இதனால் சமூகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

சனமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக ஒற்றுமையாக செயற்படுவது போன்று கூட்டாக இணைந்து போதைப் பொருள், மதுப் பாவனை இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

முன்மாதிரியாக செயல்படுவதன் மூலம் சமூக பிறழ்வுப் பாதிப்புகளிலிருந்து நாங்கள் விடுபடலாம். மதுப் பாவனை இல்லாத போதைப்பொருள் இல்லாத சட்டத்தை மதிக்கின்ற சமூகத்தை உருவாக்கலாம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .