2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சர்ச்சையைக் கிளப்பியது ஒரே இனம்’

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்  
அரச அலுவலகத்தில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப் பிரமாணத்தில், இந்த வருட சத்திய பிரமாணம் எடுப்பதில், தமிழ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடத்தே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சால் புதுவருடத்தை முன்னிட்டு, அரச திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற அரசாங்க சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி அறிவித்தல் குறிப்பில், ஒரே இனம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே, இத்தகைய சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அரச அலுவலர்கள் நேற்று  (01) சத்தியப் பிரமாணம் மேற்கொண்டனர். இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அங்கு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுக்கப்பட்டது.  

இதன்போது, எடுக்கப்பட்ட சத்தியப் பிரமாணத்துக்கமையவே, மேற்படி விடயம் குறித்தான அறிவித்தலை அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சால் நாட்டிலுள்ள சகல அரச திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.  

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சத்தியப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,  
“2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடமைகளைத் தொடங்கும் முதல் நாளான இன்றைய தினம், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் இந்நாட்டு மக்களின்   
எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம்.  

“இன்று ஆரம்பமாகும் புத்தாண்டினுள் ஒரே நாட்டின், ஒரே இனத்தின், ஒரே கொடியின் நிழலில் ஐக்கியமாகவும் ஒரே மனப்பான்மையுடனும் வளர்ச்சியடைகின்ற தாய் நாட்டை அபிவிருத்தி செய்யும் பாரிய சவாலை வெற்றி கொள்வதற்காக, அனைவரும் பயனடையும் வகையிலான துரித அபிவிருத்தியினூடே பொதுமக்களின் பணத்தில் சம்பளம் பெறுகின்ற அரசாங்க ஊழியரான நான், அரசாங்க கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற கடமைப் பொறுப்புகளை வினைத்திறனாகவும் பயன்மிக்கதாகவும் திடசங்கற்பத்துடனும் உயரிய அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் மக்களுக்கு, பக்கச் சார்பின்றியும் சத்தியப்பிரமாணம் செய்கின்றேன் அல்லது உறுதிமொழிகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இக்குறிப்பில், “ஒரே இனம்” என்ற பந்திலேயே தமிழ் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மத்தியில் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X