2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறுமியை வன்புணர்ந்தவருக்கு சிறை

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

சிறுமியொருவரைக் கடத்திச்சென்று வன்புணர்ந்த குடும்பஸ்தருக்கு, 3 குற்றங்களின் கீழ் 45 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், நேற்று (20) தீர்ப்பளித்தார். 

“எதிரி மீதான 3 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு, அவரைக் குற்றவாளியாக மன்று உறுதிசெய்த நிலையிலேயே, இந்த தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வீதம் 45 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 3 வகை சிறைத் தண்டனையையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க முடியும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின், ஓர் ஆண்டு சிறைத் தண்டணையை அனுபவிக்கவேண்டும். அத்துடன், அபராதப் பணமாக 6 ஆயிரம் ரூபாயைச் செலுத்த வேண்டும். அத்தொகையைச் செலுத்தத் தவறின், மெலும் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று, நீதிபதி மா.இளஞ்செழியன், தண்டனைத் தீர்ப்பை அறிவித்தார். 

வடமராட்சிப் பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில், 15 வயதுடைய சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அயல் வீட்டில் வசித்த 42 வயது நிரம்பிய 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X