2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீ.ஐ.டியின் அழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம்

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 21 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சீ.ஐ.டி) விடுக்கப்பட்ட அழைப்பை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்புக்கு வருமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அவ்வழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம், தன்னால், கொழும்புக்கு வர இயலாது, தேவையெனில் யாழில் விசாரணைகளுக்கு முகம் கொடுக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 18 ஆம் திகதியன்று, சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபனிடமும் குறித்த ஊடக சந்திப்பு தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .