2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுமந்திரனுக்கு எதிர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

வடமராட்சி கிழக்கு பருத்தித்துறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்தினுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் எம்.பி சுமந்திரனுக்கு கடந்த புதன்கிழமை (16) வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

அன்றைய தினத்தில் பருத்தித்துறை நீதிமன்ற வீதி மற்றும் ஆலய புனரமைப்பு செய்யப்பட்டமை தொடர்பான “கம்பெரிலிய அபிவிருத்தி யுத்தம்” என்னும் திட்டத்தின் பதாகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எம்.பி சுமந்திரனுடைய புகைப்படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த பதாகையில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய புகைப்படங்கள் மீது எந்தவிதமான வர்ணங்களும் பூசப்படவில்லை.

இதனால் எம்.பி சுமந்திரனுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையிலேயே அப் பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .