2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுவிஸ் வெளிநாட்டுத் தூதுவர் - சி.வி சந்திப்பு

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் வெளிநாட்டுத் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக் மற்றும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்​பொன்று, நேற்று (27) காலை நடைபெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த விக்னேஸ்வரன், கிராம சேவகர்களுடன் மூன்று இராணுவ வீரர்களையும் சேர்த்து அவர்கள் ஒவ்வொருவரும் பணிபுரிய வேண்டியிருப்பது வருங்காலத்தில் குடியியல் விடயங்களையும் இராணுவத்தினரே செய்வார்களோ என்று யோசிக்க வைத்துள்ளதென்றார்.

“யு9 வீதியிலே சுமார் 20 வீதித் தடைகள் இராணுவத்தினரால் போடப்பட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களைப் பயப்படுத்தி தேர்தலுக்குப் போகாமல் வைப்பதற்கோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது” எனவும் தெரிவித்தார்.

“பின்னர் மக்கள் போகாதது கொரோனாவிற்குப் பயந்தே என்று அவர்கள் கூறலாம். அத்துடன், பாதுகாப்பை ஒட்டி தேர்தல் காலத்திலே இராணுவத்தினரை வெளிக் கொண்டு வருவது ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு செயல்” எனவும், விக்னேஸ்வரன் கூறினார்.

“இம்முறை, 5ஆம் திகதி தேர்தல் நடத்தி 6ஆம் திகதியே வாக்கெண்ணுதல் நடைபெறவிருக்கின்றது. இரு நாள்களுக்கும் இடையில் இரவிலே பெட்டிகளுக்கு என்ன நடக்குமோ என்று ஒரு சந்தேக நிலை எழுந்துள்ளது. இவற்றுக்கு இராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு அழைத்தால் கட்டாயம் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும் என்று எண்ண இடமுண்டு. ஆகவே, ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம்” என்றும் உயர்ஸ்தானிகருக்கு கூறினார்.

இராணுவத்தினரை தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் கைவாங்கி அவர்களை இராணுவ முகாம்களில் முடக்கி வைக்குமாறு அரசாங்கத்தை கோர வேண்டும் என்று உயர்ஸ்தானிகரிடம் சி.வி வலியுறுத்தினார்.

இராணுவத்தினரை வட மாகாணத்திள் இதுவரை அழைத்திருப்பது கொரோனா காரணமாக என்று கூறப்பட்டாலும் இராணுவத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளில்த்தான் ஈடுபட்டு வருகின்றார்கள். இதை நீங்கள் சர்வதேச உயர்ஸ்தானிகர்களுக்கும் மற்றயவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவை பற்றி உரியவர்களுக்குத் தெரியப்படுத்துவதாக, உயர்ஸ்தானிகர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .