2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சூரிய சக்தியைப் பயன்படுத்தி விவசாயம் வெற்றியளிப்பு

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவின் மாங்குளம், முள்ளியவளை, பூதன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய செய்கைகளுக்கு சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது.

இங்குள்ள தோட்டங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறப்பட்டு நீர் பம்பிகளை இயக்கி நீர் இறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 10 விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்துக்கு 1இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவினை விவசாயத்திணைக்களம் செலுத்துகின்றது. எஞ்சிய தொகையை தவணை முறையில் விவசாயிகள் செலுத்த வேண்டியுள்ளது.

சூரிய சக்தியை பயன்டுத்துவதால் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

முதற்கட்டமாக 10 பேருக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டதாகவும் இதனை விஸ்தரிக்கவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் உ.குகநாதன் குறிப்பிட்டார்.

மின்சாரத்துக்காக விவசாயிகள் ஆரம்பத்தில் அதிகக் கட்டணத்தினை செலுத்தியதாகவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டதாகவும் குறிப்பிட்ட உ.குகநாதன், தற்போது அவர்கள் ஒரு சதம் கூட மின் கட்டணம் இல்லாது வருமானத்தினை ஈட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .