2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸாரால், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றாரெனவும் சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோவில்களின் கருவறைக்குள் ஒட்டியிருக்கின்றாரெனவும் கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடமெனவும் கூறினார். 

“தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும்  உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தை உயர்த்தும் முகமாக கோவில் கருவறையிலேயே  தேர்தல் சுவரொட்டிகளை 26ஆம் திகதி இரவு ஒட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, அவரிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” எனவும், அவர் கூறினார்.

 அத்துடன், இந்த வீட்டுக்குப் பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும் சாவகச்சேரி தொகுதி வீட்டுக்கு பொறுப்பானவருக்கு எதிராகவும்  வழக்கு பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், எனினும் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதோடு, தேர்தல் திணைக்களத்திலும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.

“சைவ மக்கள் இயல்பாக வாழ்வதா அல்லது அவர்களுடைய கோவில்களை அழிப்பதும் கிறிஸ்தவர்களுடைய நோக்கமா என்பது இங்கே புலனாகின்றது. எனவே, சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமென நான்  கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .