2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதித் தேர்தலைக் கையாள்வதை ஆராய புதிய குழு உதயமானது

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை, தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில், தமிழ் மக்கள் பேரவையால், சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு, தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக, தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ் மக்கள் பேரவை, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில், தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்கும் வகையில், மேற்படி சுயாதீன குழுவின் அங்கத்தவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, ​​புதன்கிழமை (02) கொழும்பில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் சந்திப்பை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ள பேரவை, இன்று (03) நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து ஏனைய அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகளும் இடம்பெறவுள்தாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .