2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தனியார்க் கல்வி நிலையங்களை இடைநிறுத்தவும்’

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணத்தில், தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,  தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், தனியார் கல்வி நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியப்பாடுகள் தனியார்க் கல்வி நிலையங்களில் அதிகம் காணப்படுவதால், இரண்டு வாரங்களுக்கு சகல தனியார் கல்வி நிலையங்களையும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரவலான கருத்து முன்வைக்கப்பட்டதாகவும் குறித்த கருத்து தொடர்பில் ஆராய்ந்த பின்னர், தனியார்க் கல்வி நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

உடனடியாக அமுலுக்குவரும் வகையில், மாநகர எல்லைக்குள் இயங்கிவரும் சகல தனியார்க் கல்வி நிலையங்களையும் இரண்டு வராங்களுக்கு இடைநிறுத்துமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .