2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் மக்கள் பேரவை ஐ.நாவுக்குச் செல்லவுள்ளது

Editorial   / 2018 மார்ச் 02 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதுக்காக தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் செல்லவுள்ளதாக” வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று (01) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இக் கலந்துரையாடலில், நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக பல விடயங்களை பேசியிருந்தோம். இதுவரை காலமும் தமிழ்த் தலைமைகள் கூறி வந்த கருத்துக்களில், தேர்தலின் பின்னர், எவ்வாறான மாற்றங்கள், வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன என்பன தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம்.

மேலும், தமிழ் மக்கள் பேரவையானது மக்கள் இயக்கமாகவே இருக்க வேண்டும் என்பதுடன், கட்சி ரீதியான எந்த விதத்திலும் செயற்படுவதில்லை என்பது தொடர்பான விடயங்களை கலந்துரையாடியிருந்தோம்.

இதுவரை காலமும் தமிழ் மக்கள் பேரவையானது ஒர் யாப்பை கொண்டிருக்காத நிலையில், அதற்கான கட்டுமானத்தை உருவாக்குவதுக்கு 11 பேரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இக்குழு அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அத்துடன் மக்களுக்கு அரசியல் தொடர்பான விளக்கங்களை கொடுப்பதுக்காக திருகோணமலையில் அடுத்த கூட்டமொன்றை நடாத்த ஏற்பாடு செய்யவுள்ளதுடன், இளைஞர் அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது இடம்பெற்று வரும் ஜெனிவா கூட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பட்ட போது, “அங்கு தமிழ் மக்கள் பேரவையில் இருந்து சிலர் செல்லவுள்ளதாக” தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .