2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருநெல்வேலி சந்தை வழமைக்கு திரும்புகிறது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதி இரண்டு வாரங்களின் பின்னர் இன்று (11) மீளத் திறக்கப்பட்டது.

திருநெல்வேலி பொதுச் சந்தையில் வழமையாக 300இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில், பிசிஆர் அறிக்கையின் அடிப்படையில், இன்றையதினம் 55 வியாபாரிகளுக்கு மாத்திரம் அங்கு வியாபாரம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று  இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று காலை முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

மேலும், பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படாத உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது. 

இந்த நிலையிலேயே, பிசிஆர் அறிக்கையின் முடிவுகளின் பிரகாரம் தொற்றுக்குள்ளாகாத வியாபாரிகள் மட்டும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .