2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா, சனிக்கிழமை (16) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், ஆலயப் பங்குத்தந்தை, நெடுந்தீவு பிரதேச செயலகம், இலங்கைக் கடற்படையினர் ஆகியோர் இணைந்து, இந்த ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இம்முறை இத்திருவிழாவுக்கு, யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் இந்தியாவில் இருந்தும், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைப் பக்தர்களுக்கான படகு சேவைகள், நாளை (15) அதிகாலை 4.30 மணி தொடக்கம் பகல் 10.30 மணி வரையில் நடைபெறுமெனவும் குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கான ஒருவழி பயணக் கட்டணமாக 325 ரூபாய் அறவிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களுக்கான உணவு வசதிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் அதேவேளை, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும் தனியார் கடைகளும் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .