2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திலீபனின் தூபியை புனரமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று   நடைபெற்றது.

கூட்டத்தின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை, யாழ் மாநகர சபை புனரமைப்பு செய்ய ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இணைத் தலைவர்கள், மாநகர ஆணையாளர் பொ .வாகீசனிடம் புனரமைப்புச் செய்வதற்குரிய தடைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

அதன்போது, கடந்தாண்டு டிசெம்பர் மாதம் தனது குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் மாநகர சபைக்கு வழங்கியும் ஏன் இதுவரையில் புனரமைப்பு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

1989ஆம் ஆண்டு, தற்போது வட மாகாண சபை அவைத் தலைவராக இருக்கும் சீ.வி.கே. சிவஞானம் மாநகர ஆணையாளராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட தூபியை புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்கள்.

இருப்பினும், நல்லூர் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் நினைவுத் தூபி அமைந்துள்ளதால், நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் கலந்தாலோசிப்பது மற்றும் நினைவுத் தூபி அமைந்துள்ள  காணியை குத்தகைக்கு எடுப்பது சம்பந்தமான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட பின்னர் புனரமைப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .