2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துயிலுமில்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம், இணைத் தலைவர்களான, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில், யாழ், மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் உள்ள காணிகளை, தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார்.

இந்நிலையில், இராணுவம் உள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாது. இராணுவம் வெளியேறி பின்னரே அதைப் பற்றி முடிவு எடுக்க முடியும். ஏனைய துயிலுமில்லங்களின் காணிகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X