2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் இணைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் 2020ஆம் ஆண்டின்  முதலாம் கல்வி ஆண்டில் தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நீரியல் வளர்ப்பு மற்றும் நீரியல் வள முகாமைத்துவம் டிப்ளோமா என்.வி.கியூ - 5, வெளி இணைப்பு இயந்திரப் பொறியியலாளர் என்.வி.கியூ - 3, கடலக மாலுமி என்.வி.கியூ - 4, ஆழ்கடல் சுழியோடி என்.வி.கியூ - 3, உயிப்பாதுகாப்பு என்.வி.கியூ – 3 மற்றும் 4, நீச்சல் கடலக வரைபடம் வாசித்தலும் செய்மதி தொடர்பாடலும் ஆகிய பயிற்சி நெறிகளே ஆரம்பிக்கப்படவுள்ளன.
 
மேற்படி பயிற்சி நெறிகளுக்கு க.பொ.த சாதாரண தரம், உயர்தரம்  தோற்றியவர்கள் மற்றும் அனுபவமுடையவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

மேலும் இக்கற்கை நெறிகளினை பூர்த்தி செய்பவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய தொழிற்தகமைச்சான்றிதழ் கல்லூரியால் வழங்கப்படும்.

மேற்படி கற்கை நெறிகளினை கற்க விரும்புபவர்கள் உரிய விண்ணப்பப் படிவங்களை இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தில் பெற்று 20.12.2019 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விவரங்களுக்கு  021-7388188, 071834903,  0773755063 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .