2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நாட்டை முடக்கினால் பட்டினி மரணம் ஏற்படும்’

Princiya Dixci   / 2021 மே 03 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

நாட்டை முழுமையாக முடக்கினால் பட்டினி மரணம் ஏற்படுமெனத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவ சோதனைச் சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதில் எவ்வித பயனும் இல்லை. அவ்வாறு நாட்டை முடக்கும் சந்தர்ப்பத்தில், நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும்.

“அனேக நாடுகளுமே தங்களது நாட்டை முடக்கம் நிலைக்கு உட்படுத்தாதமல், பாதிக்கப்பட்ட பகுதிகளை மாத்திரமே முடக்கி வருகின்றன.

“எமது அரசாங்கம் சுகாதார நடவடிக்கைகளை பேணுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

“குறிப்பாக, வீதியிலே இருக்கின்ற இராணுவ சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர்.

“மேலும், இராணுவச் சோதனை சாவடிகளை நாங்கள் வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை கெடுபிடி என்று நோக்கக்கூடாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .