2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாதஸ்வரக் கலைஞர்களுக்கு அழைப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 20 , மு.ப. 11:57 - 1     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில் மகோற்சவப் பெருவிழாவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.

குறித்த ஆலயத்தில் சப்பரம், தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது, தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை இசையாக மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே, புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 1

  • muru sivq Thursday, 16 May 2019 02:19 PM

    it is reasonable.it is contary to country

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .