2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நான் ரெடி நீங்கள் ரெடியா ?

எம். றொசாந்த்   / 2018 மே 22 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

“துணிவிருந்தால் என்னுடன் விவாதத்துக்கு வருவீர்களா?” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அமைச்சர் மனோகணேசனுக்கு சவால் விடுத்துள்ளார்.

மனோகணேசன் சிவாஜிலிங்கத்தை கோமாளி என தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “உங்களை பற்றி பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை. நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால், அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என்பதால் பேசாது விடுகிறேன். தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்து பொறுமை காக்க மாட்டேன்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டீர்கள், ஏணிகளாக இருந்து உங்களை ஏற்றிவிட்ட பிரபாகணேசன், குமரகுருபரன், வேலணை வேணியன் எங்கே ?

என் கருத்துக்கு எதிர்க்கருத்து கூறுவது என்றால், அரசியல் நாகரீகத்தை பேணி பேசுங்கள். இல்லை என்றால் நானும், உங்கள் கடந்த காலத்தை தூசு தட்டுவேன்”என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .