2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நியதிச் சட்டத்தைப் பெற வழக்கு தொடர வேண்டும்’

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“வடமாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு, அரசாங்கம் அங்கிகாரம் வழங்காத நிலையில், இந்த விடயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்” என, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற வடமாகாண சபையின் 97ஆவது அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“வடமாகாண முதலமைச்சர் நிதியம் நியதிச் சட்டத்தை, சட்டமா அதிபர் திணைகளமும் அரசாங்கமும் பந்துபோல் அடித்து கொண்டிருக்கிறது.

“இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கு, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

“அதன் ஊடாக, அரசாங்கம், இந்த விடயத்தை கூட தருகிறது இல்லை என வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன்,

“இது தொடர்பான வழக்கு தற்போதைக்கு அவசியமில்லை. இது தொடர்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசியுள்ளேன்.

“மேலும், ஆளுநருக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, ஒரு வாரத்துக்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

இது குறித்து, அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பாக ஆளுநருக்கு கூறியுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பாக ஆளுநர் எழுதிய கடிதங்கள் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளதாகவும் முதலமைச்சருடைய கருத்தின் அடிப்படையில் வழக்கு தொடரும் விடயத்தை பின்னர் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .