2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்திருப்பது சந்தேகம்’

Editorial   / 2019 மே 08 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், மு.தமிழ்ச்செல்வன்

சுகாதாரத்துறையில், உண்மையான அதிகாரப் பகிர்வுக்காக எந்தவொரு முயற்சியையும் இதுவரை முன்னெடுக்காதவர்கள், யாழ்ப்பாணம் மாவட்டப் பிராந்தியச் சுகாதாரச் சேவைப் பணிப்பாளர் நியமனத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பது, சட்ட அறிவு தொடர்பாக பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக, சமுதாய வைத்திய நிபுணரான வைத்தியர் முரளி வள்ளிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் ஊடகங்களுக்கு இன்று (08) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அகில இலங்கை ரீதியான நியமனங்களுக்குள் இந்தப் பிராந்தியச் சுகாதாரச் சேவைப் பணிப்பாளர் நியமனமும் அடங்குமெனவும் 1987ஆம் ஆண்டு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் 13ஆம் அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்பட்ட போதிலும், இன்றுவரையும் 25 மாவட்டங்களுக்குமான பிராந்தியச் சுகாதாரச் சேவைப் பணிப்பாளர் நியமனங்கள், மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளரால் வழங்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் உரிய சட்ட திருத்தத்தை, கடந்த 32 வருடங்களுக்குள் செய்திருக்க வேண்டுமென, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .